தமிழக செய்திகள்

காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் - 3 தங்கப்பதக்கம் வென்று தமிழ்நாடு சிறுவன் சாதனை

மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் - 2026 தொடரில், 10 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் மூன்று தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 வயதான இளம் வீரர் தமிழ் அமுதன் சாதனைப் படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திய தமிழ் அமுதனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து, எதிர்கால சாதனைகளுக்கு தவெக அரசு என்றும் துணை நிற்கும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின்போது, போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் உடன் இருந்தார்.