முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

சர்வதேச இளைஞர் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து

நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்!

உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ந்தேதி சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்!

புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்!

உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்!

கனவுகள் நனவாகட்டும்!

சாதனைகள் தொடரட்டும்! என்று கூறியுள்ளார்.