கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி சார்பில் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் நேரடியாக செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் பல்வேறு நிர்வாகக் காரணங்களால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினரை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாகவும், ஜூலை 2-வது வாரத்தில் அவர் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.