தமிழக செய்திகள்

மக்கள் தயவால் தான் த.வெ.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது - முதலமைச்சர் விஜய்

தவெக அரசில் 4 பெண்கள் அமைச்சர்கள், 8 பட்டியலினத்தவருக்கு அமைச்சர் பதவி தந்துள்ளோம்.

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-வது நாள் நிகழ்வு தொடங்கியது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளையை தற்போது கஜானாவிற்கு சென்று சேர்த்துக்கொண்டிருக்கிறோம்.

* மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டால் விட மாட்டோம்.

* மக்கள் தயவால் தான் த.வெ.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளால் தான் ஆட்சி நடக்கிறது.

* நீங்கள் அனுப்பி வைத்தவர்கள் என்றால் அமைச்சர் பதவி தந்தால் ஏன் கதறுகிறீர்கள்.

* அரசு பணத்தை தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம் ஏற்கனவே தொட்டவர்களையும் விடமாட்டோம்.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நமக்கு ஆதரவு தந்தது சுயேட்சையாக எடுத்த முடிவு என சொல்கின்றனர்.

* அம்பேத்கரின் 100 ஆண்டு கால கனவு தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் நடந்துள்ளது.

* பெண்களின் பாதுகாப்பு நாங்கள் என கூறும் உங்கள் அமைச்சரவையில் எத்தனை பெண்களுக்கு அமைச்சர் பதவி தந்தீர்கள்?

* தவெக அரசில் 4 பெண்கள் அமைச்சர்கள், 8 பட்டியலினத்தவருக்கு அமைச்சர் பதவி தந்துள்ளோம்.

* நம்மை தேர்ந்தெடுத்ததற்காக நம் மீது மட்டுமல்ல மக்கள் மீதும் அவதூறு பரப்புகிறார்கள்.

* ஊழலில் ஊறி போனவர்களால் ஆட்சியில் பங்கு என்பது அளிக்க முடியாது.

* சோபா மாடல் ஆட்சி என்ன என்பதை புரிந்து கொள்ளவே இரண்டு நாட்கள் ஆனது.

இவ்வாறு அவர் கூறினார்.