தமிழக செய்திகள்

தவெக அரசை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி- முதலமைச்சர் விஜய்

மக்கள் பணி செய்வது தான் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் முதல் கடமை.

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-வது நாள் நிகழ்வு தொடங்கியது.

சட்டசபையில் முன்னாள் உறுப்பினர்கள் சின்னசாமி, காளிமுத்து மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாடு சட்டசபையில் 12 கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

* கட்சிகள் கொள்கைகளால் வேறுபட்டிருந்தாலும் மக்கள் பணியாற்றவே வந்துள்ளோம்.

* எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என நினைத்து பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

* நான் சூட்டிங்கில் இருந்து நேரடியாக வந்து CM ஆனதாக சிலர் கூறுவது ரீல் ரியல் அல்ல.

* என் உழைப்பு உயர்வுக்கு தமிழக மக்கள் தான் பின்னால் உள்ளனர்.

* மக்கள் பணி செய்வது தான் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் முதல் கடமை.

* சினிமா கேரியரில் நான் முன்னேறியதற்கு தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும் காரணம்.

* 1990-களில் ரசிகர் மன்றமாக இருந்தபோதே மக்களுக்கு நன்மை செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.