தமிழக செய்திகள்

எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சியாக செயல்பட முடியும் என சிலர் பேசினார்கள் - முதலமைச்சர் விஜய்

மக்கள் பணி செய்வது தான் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் முதல் கடமை.

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-வது நாள் நிகழ்வு தொடங்கியது.

முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் சின்னசாமி, காளிமுத்து மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தவெக சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நன்றி

நிரந்தரமாக என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.

கருத்தால் வேறுபட்டாலும் மாநிலம் சார்ந்து ஒன்றிணைந்து பயணித்தால் நம் மாநிலம் இந்தியாவிலேயே முதன்மையானதாக இருக்கும்.

எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சியாக செயல்பட முடியும் என்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு நன்றி.

மக்கள் பணி செய்வது தான் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் முதல் கடமை.

சினிமா கேரியரில் நான் முன்னேறியதற்கு தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும் காரணம்.

படப்பிடிப்பில் இருந்து நேரடியாக இங்கு வந்ததை போல் இமேஜ் கிரியேட் செய்கிறார்கள். அது ரீல் தான் ரியல் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.