தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றிய சாதனைகளை விளக்கிடும் வகையில் 100 நாள் சாதனை மலர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மே 10-ந்தேதி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
தலைமைச் செயலகத்தில முதலமைச்சராக பொறுப்பேற்றதும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கல், பெண்களின் பாதுகாப்பிற்கான சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பான 3 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில் முதலமைச்சர் விஜய், 'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் செய்யப்பட்ட திட்டங்களின் பட்டியலை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவெக ஆட்சி அமைத்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசின் 100 நாள் சாதனை மலரை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.
அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றிய சாதனைகளை விளக்கிடும் வகையில் மலர் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.