தமிழக செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.

அவரை தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அமைச்சர் கீர்த்தனா சான்றிதழை தன்னுடன் எடுத்து வராததால் பதவி ஏற்கவில்லை.

தொடர்ந்து திமுக, அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர்.

அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் சான்றிதழை மாற்றி எடுத்து வந்ததால் பதவியேற்க முடியவில்லை.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள வைகோவை மரியாதை நிமித்தமாக அண்ணாநகர் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் சந்திக்க உள்ளார்.