தமிழக செய்திகள்

கொடுத்த வாக்கை காப்பாற்றி எங்கள் கண்ணீரை முதலமைச்சர் விஜய் துடைத்துவிட்டார் - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு தலைவர் பேட்டி

ஏகானபுரம் ஊராட்சியில் சுதந்திரத்தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின்போது அப்பகுதியில் உள்ள சாலைக்கு “தளபதி விஜய் சாலை” என்று பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்து இருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

அவர் எங்களது கண்ணீரையும், துன்பத்தையும் துடைத்துள்ளார். அவர் எங்களை சந்தித்த போது என்ன கூறினாரோ அதனை முழுவதுமாக நிறைவேற்றி இருக்கிறார். எங்கள் பகுதியில் விவசாயம், கிராம மக்களின் குடியிருப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இருந்து வந்த எங்களது மனக்குழப்பம், துன்பங்கள் நீங்கி உள்ளன.

பரந்தூரைச் சுற்றி உள்ள கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ள கொண்டாட்டத்தில் உள்ளனர். முதலமைச்சர் விஜய்யை சந்தித்து நன்றி கூற முடிவு செய்துள்ளோம்.

2019-ம் ஆண்டு பரந்தூர் விமான நிலைய திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். 1,100 நாட்கள் தாண்டியும் எங்களது போராட்டம் நீடித்தது. தற்போது முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பால் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஏகானபுரம் ஊராட்சியில் சுதந்திரத்தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின்போது அப்பகுதியில் உள்ள சாலைக்கு “தளபதி விஜய் சாலை” என்று பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.