தமிழக செய்திகள்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.