தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த சவுமியா அன்புமணி

சமூக நீதி சர்வே நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்ததற்கு நன்றி.
PMK MLA Sowmya met TN CM Vijay
Published on

17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் நேற்று உரையாற்றினார்.

அப்போது,"மத்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்த பின் மாநில அரசு சமூக நீதி கணக்கெடுப்பை மேற்கெள்ளும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சமூக நீதி சர்வே நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி, பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா ஆகியோர் நேற்று வரவேற்றனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை கட்சி எம்எல்ஏக்களுடன் பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி சந்தித்துள்ளார்.

ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வினை நடத்தும் என்று அறிவித்தமைக்காக நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com