ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததை கட்சியினர் வரவேற்றனர்.
தமிழ்நாடு சட்டசபையில் வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வந்தது. இதனிடையே முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவுச்சான்று பெற ஏற்படும் காலதாமதத்தை தடுக்க டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
* லைசென்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும், பயனாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* டிஜிட்டல் முறையில் டிரைவிங் லைசென்ஸ், பதிவுச்சான்று வழங்குவதால் தொலைந்து போனாலும் பதிவிறக்கம் செய்யலாம்.
* திமுக ஆட்சியில் வாழ்வாதாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது.
* திமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
கடந்த ஆட்சியின் போது போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டதை முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டிய போது தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் விஜய், வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகள் மீது மனிதநேயமற்ற முறையில் பதியப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
* விவசாயிகள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் விஜய் உறுதியாக கூறினார்.
ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததை கட்சியினர் வரவேற்றனர்.