தமிழக செய்திகள்

TN Assembly Election| 4 நாட்கள் தூக்கமின்றி வேட்பாளர் பட்டியலை தயாரித்த மு.க.ஸ்டாலின்

கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் காண்பதில் மட்டும் இழுபறி ஏற்பட்டாலும் இறுதியாக சுமூக முடிவு நேற்று எட்டப்பட்டது.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், வலுவான கூட்டணியை கட்டமைத்தார். தற்போது இந்த கூட்டணி 'மெகா' கூட்டணியாக உருவாகி இருக்கிறது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி மட்டும் வெளியேறினாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையின் பேரில் மற்ற கட்சிகளுடன் சுமூகமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுற்றது.

கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் காண்பதில் மட்டும் இழுபறி ஏற்பட்டாலும் இறுதியாக சுமூக முடிவு நேற்று எட்டப்பட்டது. தொகுதி பட்டியல், ஒதுக்கீடு பட்டியல் பணிக்கு மத்தியில் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக மேற்கொண்டிருக்கிறார்.

தொகுதி கள நிலவரம் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக ஆராய்ந்து, கூட்டல், கழித்தல், வகுத்தல் என்று கணக்கு பார்ப்பது போல் ஒவ்வொரு வேட்பாளரையும் அவர் தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலில் மூத்தவர்கள், பெண்கள், இளைஞர்கள், புதுமுகங்கள் என அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக கடந்த 4 நாட்களாக அவர் சரியாக தூங்காமல் பட்டியலை தயாரித்ததாக அவருடைய உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.