தமிழக செய்திகள்

பூசாரிகள் நலனுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும்.பூசாரிகளின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை உயர்த்தப்படும்.

மாலை மலர்

சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் கிராமக்கோவில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூசாரிகளின் நலனுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

* பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும்.

* பூசாரிகள் மரணமடைந்தால் வழங்கப்படும் வாரிசுதாரர் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

* கிராம கோவில் பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும்.

* இயற்கை எய்தும் கிராம பூசாரிகளின் ஈம சடங்கிற்கான தொகை ரூ.10,000 ஆக உயர்த்தப்படும்.

* ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

* பூசாரிகளின் மகன் மற்றும் மகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை மேலும் ரூ.1000 உயர்த்தப்படும்.

* பூசாரிகளின் மகன் மற்றும் மகளுக்கு வழங்கப்படும் கல்வி நிதி ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும்.

* பூசாரிகளின் பிள்ளைகளின் இளநிலை, முதுநிலை படிப்பிற்கான நிதியுதவி மேலும் ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும்.

* பூசாரிகளின் பிள்ளைகளுக்கு தொழில் சார்ந்த பட்டப்படிப்பு உதவித்தொகை ரூ.2,000 உயர்த்தி வழங்கப்படும்.

* பூசாரிகளின் பிள்ளைகளுக்கு தொழில் பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு ரூ.1000 உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.