தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு - கருப்புக்கொடி ஏற்றி முதலமைச்சர் போராட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட இருக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் இன்று நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புக்கொடி ஏற்றினார்.

தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

மத்திய பாஜக அரசின் மோசடியாக மசோதாவை இறுதி வரை எதிர்ப்போம் என முழக்கமிட்டனர்.