தமிழக செய்திகள்

லஞ்சம் இல்லாமல் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் என பேனர் வைத்த எழுத்தர்

களப்பணி ஆவணங்கள் 7 நாட்களில் பெற்றுத் தரப்படும் என வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை செல்போனில் எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அனைத்து மதங்களிலும் திருமணம் நடைபெற்றாலும் 2009-ம் ஆண்டு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலமே தம்பதி என சட்ட அங்கீகாரம் கிடைக்கும். அரசு துறைகளில் தம்பதியாக விண்ணப்பங்கள் செய்ய தகுதி கிடைக்கும்.

வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் குழந்தை திருமணம் நடைமுறை படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வர முடியும். சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும்போது அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம், ஆவண எழுத்தர் அலுவலக தயாரிப்பு செலவுகள் உள்பட சில ஆயிரங்கள் தேவைப்படும். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆவண எழுத்தர் கோதண்டபாணி தனது அலுவலகம் முன்பு வைத்துள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் இங்கு லஞ்சம் இல்லாமல் பத்திரங்கள் பதிவு செய்யப்படும். முறையான திருமணங்கள் இலவசமாக பதிந்து தரப்படும். வயதான வசதி இல்லாத பெரியவர்களுக்கு அரசு கட்டணம் மட்டும் செலுத்தினால் செட்டில்மெண்ட் உயில் ஆவணங்கள் இலவசமாக பதிந்து தரப்படும்.

மேன்வெல் வில்லங்கம் 7 நாட்களில் அரசு அலுவலக பணி நாட்களில் வாங்கி தரப்படும். களப்பணி ஆவணங்கள் 7 நாட்களில் பெற்றுத் தரப்படும் என வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை செல்போனில் எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.