முதலமைச்சர் விஜய் மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இன்று விலைவாசி கடுமையாக ஏறிவிட்டது. விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு.
இவர்கள் ஆட்சி வருவதற்கு முன்பு உணவு பொருட்களுடைய விலை என்ன என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, விஜய் முதலமைச்சரான பிறகு ஒரு கிலோ அரிசி 20 ரூபாய் விலை உயர்ந்துவிட்டது. பருப்பு 70 சதவீதம் விலை உயர்ந்துவிட்டது. எண்ணெய் விலை 50% உயர்ந்துவிட்டது. புளி விலை உயர்ந்துவிட்டது.
அதுமட்டுமில்லாமல் உணவு தானியங்கள் விலை உயர்ந்துவிட்டது. அதோடு உணவு தயாரிக்க கூடிய மளிகை சாமானுடைய விலை 40% உயர்ந்துவிட்டது.
அதைவிட இன்று தீபாவளியும் போது எல்லா இல்லங்களிலுமே ஆவினில் சென்று தரமாக செய்யப்பட்ட இனிப்பு பலகாரம் வாங்குவோம் என்று நினைத்திருந்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவின் நிறுவனத்திலிருந்து அதிக அளவிலே இனிப்புகள் தயார் செய்து விற்கப்படுகின்றன. ஆனால் அங்கும் விலை உயர்த்திவிட்டார்கள்.
ஏழைகள் எல்லாம் கடுமையாக பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு விஞ்ஞான முறைப்படி இவர்கள் செயல்பாடு உள்ளது. சன்ன ரக அரிசி கொடுப்பதாக சொன்னீர்கள். எந்த மாநிலத்தில்
சன்ன அரிசி கொள்முல் செய்தீர்கள்?. அதற்கு என்ன டெண்டர் வைத்தீர்கள்.
ஏற்கனவே ரேஷன் கடையில் வழங்கப்படுகின்ற அந்த அரிசியை பாலிஷ் செய்து ஒரு கிலோ 30 ரூபாய்க்கு இந்த அரசு விற்பனை செய்வதாக பரவலான தகவல் ஊடகத்திலும் பத்திரிக்கையிலும் வந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே வழங்கப்பட்ட அரிசியை பாலிஷ் செய்துதான் ரூ.30 வாங்கிவிட்டு எங்களுக்கு தருகிறார்கள் என தாய்மார்கள் கூறுகின்றனர்.
இந்த ஆட்சி வந்த உடனே கடந்த ஆட்சியில் நடைபெற்று கொண்டிருந்த சாலை பணிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டது.
அதன்பிறகு டெண்டர் அறிவித்து பணியை துவங்கவில்லை.
கடந்த காலத்திலும் இவர்கள் ஆட்சியிலும் கட்டுமான பொருளுடைய விலைகளை ஒப்பிடுகின்ற பொழுது மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
கடந்த கால ஆட்சியில டெண்டர் விடும் பொழுது ஷெடியூல் ஆப் ரேட்டில் ஒரு டன் தாறு 1000 ரூபாய். இப்போது ஒரு டன் தாறு ஒரு லட்ச ரூபாய். 100 சதம் ஏறிவிட்டது. ஜல்லி, எம்சன்ட் விலை ஏறிவிட்டது.
சாலை அமைக்கக்கூடிய எந்திரினுடைய வாடகை உயர்ந்துவிட்டது.
பொதுப்பணித்துறை அமைச்சர் தான் நெடுஞ்சாலை துறையை வைத்திருக்கிறார். அவர் சட்டமன்றத்தில் கடந்த கால ஆட்சியில்
ஷெடியூல் ஆப் ரேட் அதிகப்படுத்தி ஊழல் நடந்ததென்று கூறினார்.
இப்பொழுது இவ்வளவு விலை ஏற்று வந்த பிறகு எப்படி சாலை பணி செய்யப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.