.10, 12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்தமாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது-ஊக்கத்தொகை முதலமைச்சர் விஜய் 2-ம் கட்டமாக 26, 27-ந்தேதியில் வழங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ - மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகளை கட்சி தலைவர் விஜய் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் விஜய், முதல்-அமைச்சர் ஆன பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கி வருகிறார்.
முதல் கட்ட விருதுகள் வழங்கும் விழா சென்னை யில் கடந்த 4-ந்தேதி நடை பெற்றது. இதில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்பு ரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகு திகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய், கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கினார். இந்த விழாவில் மாண வர்களுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் 2-ம் கட்டமாக த.வெ.க. சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென் ஷன் சென்டரில் இந்த விழாவை நடத்துவதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகி றது. 2 நாட்களிலும் பிற்பகல் 2.30 மணிக்கு விழா தொடங்கி நடைபெறுகிறது.
வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்ற தொகுதி களில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படு கிறது.
இந்த 2 நாட்களிலும் மொத்தம் 36 தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவி களுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட உள்ளன.இந்த விருது மற்றும் ஊக்கத்தொகைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கி மாணவ-மாணவி களுக்கு வழங்கி கவுரவப்ப டுத்த உள்ளார்.
இந்த விழாவில் பங்கேற் கும் மாணவ-மாணவிக ளுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் அவர்க ளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நுழைவு சீட்டும் வழங்கப்பட உள்ளது. இதனை பெறுவ தற்காக அந்தந்த மாவட்டங்க ளின் எம்.எல்.ஏ.க்கள் மற் றும் மாவட்ட செயலாளர்கள் சென்னை வந்திருந்தனர். விழா ஏற்பாடுகள் தொடர்பாக அவர்க ளுடன் அமைச்சர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாணவ-மாண விகளுக்கான அடையாள அட்டை மற்றும் அனுமதி சீட்டுகளை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலா ளர்களிடம் அமைச்சர் என்.ஆனந்த் வழங்கினார். மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் என்.ஆனந்த் செய்து வருகிறார்.
அடையாள அட்டை மற்றும் அனுமதி சீட்டுகளை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அதை தங்கள் தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவி கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சந்தித்து வழங்குகிறார்கள்.
மேலும் கல்வி விருது பெறுவதற்காக மாணவ-மாணவிகளை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை யும் மாவட்ட செயலாளர்கள் தொடங்கியுள்ளனர். விருது பெறும் மாணவ-மாணவிக ளையும், அவர்களின் பெற்றோர்களையும் சென்னைக்கு அழைத்து வருவதற்கு தனி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன..
விழா நடைபெறும் நாட்களில் காலையில் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற் றோர்கள் தனி பஸ்களில் சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர். விழாவில் பங்கேற்க மாணவ-மாணவிகள் தயாராகும் வகையில் அவர்களுக்கு அறைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. அப்போது அவர்ளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
பின்னர் மாணவ-மாணவிகள் தயாரான பிறகு பகல் 11 மணியளவில் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்ட ருக்கு அழைத்து வரப்படுகி றார்கள். அங்கு அவர்களுக்கு மதிய உணவு மற்றும் நொறுக்கு தீனிகள் வழங் கப்பட உள்ளன. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு விழா தொடங்கி நடைபெ றுகிறது. 2 நாட்களிலும் இரவு வரை இந்த விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.