செக்கானூரணி காவல் மரணம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்னும் எத்தனை நாட்கள் மவுனம் காப்பார்? - கனிமொழி எம்.பி. கேள்வி

சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் ஊடகங்களில் கசிந்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
DMK MP Kanimozhi
Published on: 

செக்கானூரணி காவல் மரணம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்னும் எத்தனை நாட்களுக்கு மவுனம் காக்கப் போகிறார்? என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு பல்வேறு அதிர்ச்சியூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நவம்பர் 4ஆம் தேதியே அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார், நவம்பர் 13ஆம் தேதிதான் FIR ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் 14ஆம் தேதிதான் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் காவல்துறையிடம், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்களும் இல்லை. சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் ஊடகங்களில் கசிந்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இத்தனை சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிறைந்த இந்த மரணம் குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு மௌனம் காக்கப் போகிறார்? காவல்துறை உண்மையில் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?

இந்த மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிதியுதவியையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X