தமிழக செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில்: பூந்தமல்லி-வடபழனி இடையே மஞ்சள் வழித்தட கட்டண விவரங்கள் வெளியீடு!

குறைந்தபட்சக் கட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்சமாக ரூ.40 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மஞ்சள் வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியாக, ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சென்னை பெருநகரப் போக்குவரத்து அமைப்பில் புதிய மைல்கல்லாக, இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் பாதையான பூந்தமல்லி-வடபழனி இடையேயான 14.6 கி.மீ தொலைவு வரையிலான உயர்மட்ட மெட்ரோ சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. வரும் அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நேரில் வருகை தந்து அல்லது காணொளி வாயிலாக இச்சேவையை முறைப்படி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் விரைவில் ரெயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், அதற்கான பயணக் கட்டண விவரங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மஞ்சள் வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியாக, ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சக் கட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்சமாக ரூ.40 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

*பூந்தமல்லி முதல் பூந்தமல்லி பெருவழிச்சாலை வரை: ரூ.10

*பூந்தமல்லி முதல் பூந்தமல்லி அரசு மருத்துவமனை வரை:ரூ.20

*பூந்தமல்லி முதல் கரையாஞ்சாவடி மற்றும் குமணன்சாவடி வரை:ரூ.20

*பூந்தமல்லி முதல் காட்டுப்பாக்கம் வரை: ரூ.20

*பூந்தமல்லி முதல் அய்யப்பன்தாங்கல், தெள்ளியரகரம் மற்றும் போரூர் மூலைக்கடை வரை:ரூ.30

*பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரை:ரூ.30

*பூந்தமல்லி முதல் வடபழனி வரை: ரூ.40

விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு தொடக்கம்

பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான இந்த வழித்தடத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவிலேயே சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட உள்ளது. இந்த புதிய வழித்தடம் திறக்கப்படுவதன் மூலம் மேற்கு சென்னைப் பகுதியிலிருந்து நகரின் மையப்பகுதிக்குச் செல்லும் பயணிகளின் சிரமம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT