

கோவை, திருப்பூர், போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டை செல்ல ஐதராபாத் சார்லபள்ளி – செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரெயில் (07191) அறிவிப்பு. இதனால் இதுவரை ஈரோடு வழியாகச் செல்ல வேண்டிய சிரமம் நீங்கி, தென்காசி, செங்கோட்டை பகுதிகளுக்கு நேரடி ரெயில் வசதி கிடைக்கிறது.
கோவை மற்றும் திருப்பூரில் இருந்து தென்காசி, செங்கோட்டை பகுதிகளுக்கு ரெயிலில் செல்ல விரும்புவோர், இதுவரை ஈரோடு சென்று அங்கிருந்து பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில், ஐதராபாத் சார்லபள்ளி - செங்கோட்டை இடையே வெள்ளிதோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரெயிலானது காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக திருப்பூர் வரும் ரெயில், போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டை செல்கிறது.
புதிய வாராந்திர ரெயில் (எண்: 07191) மூலம் திருப்பூர் மற்றும் போத்தனுாரில் இருந்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிகளுக்கு பயணம் செய்வது எளிதாகியுள்ளது.