தமிழக செய்திகள்

பழைய பொருட்களை வீடுகளுக்கே சென்று பெற்று அழிக்கும் சென்னை மாநகராட்சியின் திட்டம்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

கடந்த ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வந்தது.

இந்த எளிய நடைமுறையால் வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை எறிய சிரமப்பட்டு வந்த சென்னை மக்களுக்குப் பெரு பெருமூச்சு அளிப்பதாக அமைந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் தேங்கிக்கிடக்கும் சோஃபா, மெத்தை, பழைய மரச்சாமான்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று சேகரித்து எாிக்கும் சிறப்புத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை 39.93 மெட்ரிக் டன் எடையுள்ள பழைய பழுதுபட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு எாிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக வீடுகளைப் புதுப்பிக்கும்போதோ அல்லது பண்டிகைக் காலங்களிலோ மக்கள் பயன்படாத சோஃபா, மெத்தைகள் மற்றும் உடைந்த மரச்சாமான்களை வீதி ஓரங்களிலோ அல்லது குப்பைத் தொட்டிகளுக்கு அருகிலோ வீசிச் செல்கின்றனர். இதனால் நகரத்தின் தூய்மை கெடுவதோடு போக்குவரத்து இடையூறுகளும் ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற பெரிய கழிவுப் பொருட்களை எளிதாக அகற்ற சென்னை மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

39.93 மெட்ரிக் டன் கழிவுகள் எாிப்பு

கடந்த ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த விசேஷ சேவையின் கீழ், பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இதுவரை 39.93 மெட்ரிக் டன் அளவிலான பயன்பாடற்ற சோஃபா, மெத்தை மற்றும் பழைய பொருட்கள் வீடுகளில் இருந்து நேரடியாகச் சேகரிக்கப்பட்டுத் தூய்மைப் பணியாளர்களால் பாதுகாப்பான முறையில் எாிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார சனிக்கிழமையும் சேவை

பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், மாநகராட்சி ஊழியர்கள் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நேரடியாக வீடுகளுக்கே சென்று கழிவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்கின்றனர். இந்த எளிய நடைமுறையால் வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை எறிய சிரமப்பட்டு வந்த சென்னை மக்களுக்குப் பெரு பெருமூச்சு அளிப்பதாக அமைந்துள்ளது.

முன்பதிவு செய்யும் எளிய முறைகள்

பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு மாநகராட்சியைத் தொடர்பு கொள்ள இரண்டு வழிகள் வழங்கப்பட்டுள்ளன. 'நம்ம சென்னை' செயலி வழியாகத் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கோரிக்கை விடுக்கலாம். செயலியைப் பயன்படுத்த முடியாதவர்கள் '94450 61913' என்ற வாட்ஸ்அப் எண்ணிற்குத் தகவல் அளித்தால், மாநகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை தோறும் நேரடியாக வீடுகளுக்கே சென்று பழைய பொருட்களைப் பெற்றுக்கொள்வர்.

SCROLL FOR NEXT