சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு பிரதான வரி வருவாயாக சொத்துவரி உள்ளது. இதன் மூலமே, சென்னைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு பணி போன்ற அத்திவாசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சொத்து உரிமையாளர்களிடமிருந்து நிலுவை சொத்துவரி வசூலிக்க சென்னை மாநகராட்சியால் சிறப்பு முகாம்கள் அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு முகாம்கள் இன்று முதல் 17-ந்தேதி வரை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். சொத்து உரிமையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நிலுவை சொத்துவரியை செலுத்தி, சட்ட விதிகளின்படி தனிவட்டி விதிப்பினைத் தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.