தமிழக செய்திகள்

செக்கானூரணி காவல் மரணம் : 3 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன்

செக்கானுரணி காவல் மரண விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 காவலருக்கு சிபிசிஐடி சம்மன்

செக்கானூரணி காவல் மரண விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 காவலருக்கு சிபிசிஐடி சம்மன் .காவல் ஆய்வாளர் முத்து, தலைமை காவலர் பழனிவேல் ராஜன் மற்றும் கலைச்செல்விக்கு ஆகியோர் விிசாரணைக்காக நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது .

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது .இந்த விவகாரத்தில் பணியில் இருந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை மற்றும் ஆவணங்கள்/சிசிடிவி காட்சிகள் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் 3 காவல் ஆயவாளர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது .

சம்பவத்தின் பின்னணி

தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் தனது லாரி தீப்பிடித்து எரிந்ததாக செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அவரது புகாரில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, விசாரணைக்காக அவரைக் காவல் நிலைய ஆய்வாளர் அறையில் இரவு தங்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

நவம்பர் 14-ம் தேதி அதிகாலை காவல் நிலையக் கழிவறைக்குச் சென்ற பாலகிருஷ்ணன் தூக்கிட்ட நிலையில் மயங்கிக் கிடந்ததாகவும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விசாரணை நடவடிக்கை

காவல் நிலையத்திற்குள் புகார்தாரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தென்மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிதாரி இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டார்

சம்பவம் நடந்த நேரத்தில் பணியில் இருந்த செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சம்பவத்தன்று பணியில் இருந்த காவலர்கள் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT