சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, சேலம், மதுரை ஆகிய 13 மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வரும் 30ம் தேதி அன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று முதல் 30ம் தேதி வரையிலான 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, வரும் ஜூலை 3 மற்றும் 4ம் தேதிகளில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.