தமிழக செய்திகள்

முதலமைச்சரை தரக்குறைவாக பேசிய வழக்கு - சேகர் பாபு காவல் நிலையத்தில் ஆஜர்

தவெக சார்பில் ஜெகதீஸ்வரி அளித்த புகாரின் பேரில் சேகர் பாபு மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஆஜரானார்.

சென்னையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தரக்குறைவாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சி உறுப்பினர் ஜெகதீஸ்வரி அளித்த புகாரின் பேரில், ஆபாசமாக பேசுதல்,

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவல் நிலையத்தில் ஆஜர்

இதையடுத்து சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சேகர் பாபுவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரான சேகர் பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT