அ.தி.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் இணைந்தனர். இணைப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இணைப்பு விழாவில் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
* தேர்தலுக்கு முன்னதாகவே த.வெ.க. உடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க. தலைமையிடம் வலியுறுத்தினோம். ஆனால் த.வெ.க. உடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க. தலைமை செவிசாய்க்கவில்லை.
* தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைக்க மறுத்துவிட்டு தி.மு.க.வுடன் கூட்டணி சேர முடிவெடுத்தது சரியா? தீய சக்தி தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டது சரியா?
* முதலமைச்சர் விஜய் என்ற உறுதியான ஒன்றை தலைமையின் கீழ் தொடர்ந்து செயல்படுவோம்.
* இன்றைய விழாவில் நீங்கள் பார்த்தது வெறும் டிரெய்லர் தான், டெல்டாவில் நடக்கப்போவது தான் மெயின் பிக்சர்.
* மாற்றத்தை நோக்கிய வெற்றிப்பயணத்தில் அ.தி.மு.க.வினர் பலர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளனர்.
* பழையன கழிந்து புதியன புகுந்ததால் இங்கே கூடியுள்ள ஒவ்வொருவர் முகத்தில் மகிழ்ச்சி.
* முதலமைச்சரிடம் அனுமதி பெற்றுத்தாருங்கள், டெல்டாவில் மிகப்பெரிய இணைப்பு விழாவை நடத்தி காட்டுவோம்.
* காவிரி- குண்டாறு திட்டத்தை நடத்திக்காட்டுவோம், ஜல்லிக்கட்டுக்கு துணை நிற்போம் என்றார்.