தமிழக செய்திகள்

நாளை த.வெ.க.வில் இணைகிறேன்- சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

மாபெரும் இணைப்பு விழா நாளை காலை 9 மணி முதல் மாமல்லபுரம் Four Points by Sheraton ஓட்டலில் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் நாளை இணைய உள்ளதாக சி.விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக த.வெ.க.வில் இணைகிறேன். த.வெ.கவில் என்னை இணைத்துக்கொண்டு என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மாபெரும் இணைப்பு விழா நாளை காலை 9 மணி முதல் மாமல்லபுரம் Four Points by Sheraton ஓட்டலில் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் த.வெ.க.வில் இணைந்தனர். அதேபோன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோரும் த.வெ.க.வில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.