தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் பெண் படுகொலை: வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு தவெக அரசு தரும் பரிசா? - கனிமொழி

நள்ளிரவில் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்ட இந்த நிகழ்வு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூர் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரி ரெஜிலா (39). இந்த தம்பதியினருக்கு பிளெஸ்ஸி (15), பிரின்ஸா பாப்பா (14) மற்றும் பிளெசெட் ராஜா (10) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், உறங்கிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் மேரி ரெஜிலா என்ற பெண் பலியானார்.

அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமிகள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நள்ளிரவில் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு என்று திமுக எம்பி கனிமொழி கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிறப் பெண் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை? தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?

என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT