திருநெல்வேலியில் இருந்து புனித யாத்திரையாக உத்தர பிரதேசத்தில் உள்ள காசி, அயோத்தி போன்ற புனித தலங்களுக்கு செல்வதற்கு ‘பாரத் கெளரவ்’ என்ற சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி-யின் தெற்கு மண்டலம், செப்டம்பர் 9 முதல் 17 வரை கயா, காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி ஆகிய இடங்களுக்கு ‘காசி தீர்த்த யாத்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ள கலாச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து தொடங்கும் இந்த ரெயில் சேவை விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் மற்றும் சென்னை வழியாகப் பயணிக்கும்.
இந்த ரெயிலில் ஒரு ஏசி இரு அடுக்கு, ஏழு ஏசி மூன்று அடுக்கு, மூன்று படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஒரு சமையலறைப் பெட்டி மற்றும் இரண்டு சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் ஆகியவை இடம்பெறும்.
இறுதியாக இந்த ரெயில் பயணம் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 17 ஆம் தேதி திருநெல்வேலியில் முடிவடையும் என்று அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்த ஆன்மீக சுற்றுப்பயணம் மொத்தமாக ஒன்பது பகல்கள் மற்றும் எட்டு இரவுகளை கொண்டுள்ளது என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.