பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார். 73 வயதான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலையில் உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில் இவரது மரணத்திற்கு "We the leaders" அமைப்பின் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது,
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, K. பாக்கியராஜ், உடல்நலக்குறைவால் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
பாக்கியராஜின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.
இவ்வாறு அவர் கூறினார்.