சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கள எதார்த்தத்திற்கும் ஆளுநர் உரைக்கும் மிகப்பெரிய வேறுபாடு எங்களுக்கு தெரிகிறது.
* எதிர்க்கட்சி மட்டும் அல்ல, ஆளுங்கட்சி வரிசையிலும் எங்களது வாக்குகள் தான் உள்ளது.
* கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மாதந்தோறும் தவறாமல் செலுத்துவதற்கு நன்றி. காலை உணவுத் திட்டத்தை நீட்டிக்கப் போவதாக செய்தி அறிந்தோம். அதற்கும் நன்றி பாராட்டுகள்.
* நான் முதல்வன் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கேள்விப்பட்டோம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகளில் 41 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். நான் முதல்வன் திட்டத்தில் யுபிஎஸ்சி மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர். இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவி ராஜேஸ்வரி, நான் முதல்வன் திட்ட பயனாளி.
இவ்வாறு அவர் கூறினார்.