தமிழக செய்திகள்

தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் பொறுப்பேற்றார்

நிகழ்ச்சியில் ஆளுநரின் செயலாளர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி.அர்லேகருக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஆர்.வி.அர்லேகரை தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆளுநரின் செயலாளர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

முழுநேர ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.வி.அர்லேகரை முதலமைச்சர் விஜய் இன்று மாலை 4 மணிக்கு சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாகவும் ஆளுநருடன் முதலமைச்சர் விஜய் ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT