தமிழக செய்திகள்

தேர்தலையொட்டி ஏப். 23 பொது விடுமுறை - அரசாணை வெளியீடு!

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியீடு

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 23-ஐ பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டிற்கு ஏப்.23 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 16வது சட்டப்பேரவையில் பதவிக்காலம் மே.10-டன் முடிவடையும் நிலையில், மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன.

அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், அனைத்துத் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பணி நிமித்தமாக வாக்களிக்க முடியாமல் போவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.