பொள்ளாச்சியில் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு நடக்கிறது.
வீ த லீடர்ஸ் அமைப்பின் மாநாட்டில் முதலமைச்சர் விஜயை நேரடியாக எதிர்க்கும் வகையில் அண்ணாமலை பேச்சு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்களை குறிவைத்தே அரசியல் செய்ய திட்டம் எனவும் தகவல், தவெகவை எதிர்க்கும் இளைஞர்களை தன் பக்கம் இழுக்க திட்டம்
வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாட்டில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அண்ணாமலை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீ தி லீடர்ஸ் (We The Leaders) என்பது தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை அவர்களால் கடந்த ஜூன் தொடங்கப்பட்ட ஒரு புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கமாகும். சாதி, வாரிசு அரசியலைத் தாண்டி, மக்கள் மையமான மற்றும் தரவு சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை தமிழக அரசியல் போக்கு குறித்த தனது கருத்து வேறுபாடுகள் காரணமாக பாஜகவில் இருந்து விலகி, இந்த புதிய அரசியல் இயக்கத்தைத் தனியாகத் தொடங்கினார்.
அண்ணாமலை தொடங்கியுள்ள வி த லீடர்ஸ் இயக்கத்தில் தற்போது வரை சுமார் 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இந்த இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடைபெற்று வருகின்றன.