விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சிவகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் வேளாண் துறையைப் போல நெசவுத்துறைக்கும் தனி பட்ஜெட் போடப்படும்.
* வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு கொடுப்பதாக 2019-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சொன்னதை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.
* பெரும்பான்மையான வன்னியர், பட்டியல் சமுதாய மக்கள் அடித்துக்கொண்டால் குளிர் காயலாம் என திமுக நினைக்கிறது.
* இன்றைய இளைஞர்கள் தெளிவாக உள்ளனர். திமுகவின் கனவு பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.