தமிழக செய்திகள்

NDA கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் - வாக்களித்தபின் அன்புமணி பேட்டி

வேலையில்லாத இளைஞர்களுக்கு விடுதலை கிடைக்கும் நாள், ஊழல்களுக்கு விடுதலை கிடைக்கும் நாள்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலையிலேயே வரிசையில் நின்று மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தியாகராய நகர் வாக்குச்சாவடியில் பாமக தலைவர் அன்புமணி தனது மனைவி, மகள்களுடன் வந்து வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:

* பணம் கொடுத்தால் தேர்தலை நிறுத்துங்கள். இவ்வாறு 3 முறை செய்தால் கண்டிப்பாக மாற்றம் வரும்.

* வேலையில்லாத இளைஞர்களுக்கு விடுதலை கிடைக்கும் நாள், ஊழல்களுக்கு விடுதலை கிடைக்கும் நாள்.

* பெண்கள், மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். என்டிஏ கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT