எல் நினோ தாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் உடனடியாக ஆலோசிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இடைத்தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
* அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணம் இது.
* 5 மாதங்களுக்கு முன்பு வென்ற அதிமுக தற்போது 3-வது இடம்.
* தமிழ்நாட்டை அதிக நாட்கள் ஆண்ட அதிமுக 3-வது இடத்திற்கு சென்றுள்ளது.
* அதிமுகவுக்கு நல்ல ஒரு ஆலோசனையாக கூறுகிறேன். தவறான எண்ணத்தில் இல்லை.
* இடைத்தேர்தல் வெற்றி தவெகவிற்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
* தவெக ஆட்சியில் அமைச்சர் பதவி வேண்டுமென நாங்கள் கேட்கவும் இல்லை, கேட்கப் போவதும் இல்லை.
* மக்கள் சார்ந்த பிரச்சனைகளில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
* எல் நினோ தாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் உடனடியாக ஆலோசிக்க வேண்டும்.
* மேட்டூர் அணையில் தற்போது 30 டிஎம்சி தண்ணீர் தான் உள்ளது.
* மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 1 வாரத்திற்கு தான் தண்ணீர் திறக்க முடியும்.
* இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் ஏக்கரில் தான் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது.
* இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் 1.6 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது.
* தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.