தமிழக செய்திகள்

அமோனியா கசிவு விவகாரம்: முதலமைச்சரிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிப்பு

புனித பீட்டர் பால் கடல் உணவு நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு குழு ஆய்வு.

அமோனியா விஷவாயு கசிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை முதலமைச்சர் விஜயிடம் சமர்ப்பித்துள்ளார்.

இறால் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நிபுணர் குழு பரிந்துறை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடைக்கால அறிக்கை ஏற்கனவே முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று இறுதி அறிக்கையை நிபுணர் குழு சமர்ப்பித்தது.

24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கையும், 3 நாட்களில் இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்த நிலையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அமோனியா வாயு கசிவு பாதிப்பால் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.சுமார் 63 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தை தொடர்ந்து புனித பீட்டர் பால் கடல் உணவு நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு குழு ஆய்வு நடத்தியது.

ஆய்வை தொடர்ந்து சமர்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில், புனித பீட்டர் பால் கடல் உணவு நிறுவனத்தை நிரந்தமாக மூட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு பரிந்துரை செய்துள்ளது.