தமிழக செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் வளர்மதியை பதவி நீக்கம் செய்து எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீரங்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வளர்மதி அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி அக்கட்சியில் இருந்து விலகி தவெக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அமைப்புச் செயலாளருமான வளர்மதியை பதவி நீக்கம் செய்து, முன்னாள் முதல்வரும் அதிமுக கழக செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி எஸ்.வளர்மதி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT