தமிழக செய்திகள்

தவெக ஆட்சிக்கு வாக்களித்த பெண்கள் தற்போது வருத்தப்படுகிறார்கள்: செல்லூர் ராஜூ

தவெக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை செய்திகள் வந்து கொண்டு இருப்பதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

அதிமுக கட்சியில் பெண்களுக்கு தனி மரியாதை கொடுக்கப்பட்டது, அது தவெக கட்சியில் இல்லை. இன்றைக்கு தவெக எம்.எல்.ஏ ஒரு மாவட்ட ஆட்சியருக்கு தவறான மெசேஜ் அனுப்புகிறார்.

தவெக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

தமிழ்நாட்டில் நாள்தோறும் திருட்டு, காவல் நிலைய மரணங்கள், கைதிகள் தப்பி ஓடுவது மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

தமிழகத்தில் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை, இந்த ஆட்சியில் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

தீபாவளி அன்று 17 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் என அத்தனை நபர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தில் நிகழ்ந்து வரும் எந்த பிரச்சனைகளுக்கும் தமிழக முதலமைச்சர் வாய் திறக்காமல் உள்ளார்.

எந்த பெண்கள் தவெக ஆட்சியை ஆதரித்து வாக்களித்தார்களோ, அவர்கள் தற்போது வருத்தப்படுகிறார்கள்.

மத்திய அரசு இதில் பாரபட்சம் பார்க்காமல், இந்த ஆட்சியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் காய்கறி விலை, அரிசி விலை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் மீதான விலைகளும் அதிகரித்துள்ளன.

துணை மேயரிடம் மனு கொடுக்க சென்றவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதற்கும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தவறு செய்த 10 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது, அவர்களுக்கான வாகன சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

அதேபோன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், தவறு செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன; அவர்களின் பதவி பறிக்கப்பட்டது.

இந்த ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை, அதனால் இந்த ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் தான் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT