மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-
* ஜல்லிக்கட்டை பார்ப்பதை போல இந்த நிகழ்ச்சி உள்ளது.
* விஜய் என்பது தமிழ்நாட்டில் மட்டும் ஒலிக்கும் வெற்றி முழக்கம் அல்ல, அது உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
* தமிழ்நாட்டில் 75 வருட பண அரசியலை தூக்கி எறிந்து த.வெ.க. ஆட்சியமைத்துள்ளது.
* த.வெ.க.வில் இணைந்த விஜயபாஸ்கர்கள் இருவருக்கும் த.வெ.க.வில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
* அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 90 சதவீத பேர் த.வெ.க.வில் இணைவார்கள்.
* யாருடன் இணைந்து வேண்டுமானாலும் ஆட்சி அமைக்க த.வெ.க நினைக்கவில்லை.
* கொள்கை பிடிப்புடன் ஆட்சியமைக்க வேண்டும் என விஜய் உறுதியாக இருந்தார். சமூக நீதி, மதச்சார்பற்ற கொள்கையில் முதலமைச்சர் உறுதியாக இருந்தார். மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்தே ஆட்சி அமைக்க விஜய் விரும்பினார். கொள்கை பிடிப்புடன் இருந்ததால் தான் அதிமுக உடன் கூட்டணி குறித்து பேசவில்லை.
* தேர்தல் முடிவு வந்த மே 4-ந்தேதி இரவு 10 மணிக்கு ஆட்சி அமைக்க திமுக- அதிமுக பேச்சுவார்த்தை தொடங்கியது.
* ஜெயலலிதாவின் சேலையை சபையில் வைத்து இழுத்தவர்களுடன் கூட்டணி வைக்க பேசினர். தான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அம்மா ஜெயலலிதாவை அவமதித்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசி உள்ளார்.
* தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்றார் எடப்பாடி பழனிசாமி.
* அதிமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே எடப்பாடி பழனிசாமிடி மறந்துவிட்டார்.
* அதிமுகவில் உள்ள 60 சதவீத பேர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து விட்டனர். இனி அதிமுக பேப்பர் அளவில்தான் இருக்கும்.
* எடப்பாடி பழனிசாமியின் துரோகம், சூழ்ச்சியால் இனி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், அவரது மகனும் மட்டுமே இருப்பார்கள்.
* அரசியல் ஆசை இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுனை அதிமுகவின் உறுப்பினராக்கியது ஏன்?
* உதயநிதியின் வாழ்க்கைக்காக கரூரில் எங்கள் மக்களை கொன்று குவித்தீர்களே ஸ்டாலின் சார். காவல்துறையை வைத்துக்கொண்டு எங்கள் மக்களை கொன்று குவித்தீர்களே ஸ்டாலின் சார்.
* கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு உள்ளது. அதை முடிக்காமல் விடமாட்டோம் என்று கூறினார்.