தமிழக செய்திகள்

நீங்கள் தான் உங்கள் குடும்பத்தில் கடைசி முதலமைச்சர்- ஆதவ் அர்ஜூனா

காவல்துறை ஒத்துழைப்பு இல்லாததால் பல்வேறு இடங்களில் த.வெ.க. தலைவர் விஜயால் பிரசாரம் செய்ய முடியவில்லை.

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-

* கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் மரணத்தில் என்ன நடந்தது என்று எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நன்றாக தெரியும்.

* கரூரில் திட்டமிட்ட சூழ்ச்சியை உருவாக்கி கூட்ட நெரிசலை ஏற்படுத்தி மக்களை கொன்று குவித்துள்ளனர்.

* செந்தில்பாலாஜி திட்டமிட்டு கரூர் த.வெ.க. மாவட்ட செயலாளரை சிறையில் அடைத்தார்.

* காவல்துறை ஒத்துழைப்பு இல்லாததால் பல்வேறு இடங்களில் த.வெ.க. தலைவர் விஜயால் பிரசாரம் செய்ய முடியவில்லை. மீண்டும் கூட்ட நெரிசலை உருவாக்க முயன்றதால் தான் விஜய் கடைசி நாட்களல் பிரசாரம் செய்யவில்லை.

* தி.மு.க. ஆட்சியில் 14 மாவட்டங்களில் விஜய் வரும் போது நெரிசலை உருவாக்க சதி தீட்டப்பட்டது. திமுகவினர் சதி காரணமாகவே கடலூருக்கு விஜய் பிரசாரத்திற்கு செல்லவில்லை.

* கரூர் பாவத்தால் தான் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார். இந்த பாவம் உங்கள் குடும்பத்தை விடாது.

* கரூரில் பலர் சிந்திய கண்ணீரால் தான் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார், தேர்தல் முடிவுக்கு பின் கண்ணீர் விட்டார்.

* மு.க.ஸ்டாலின் அவர்களே குறித்து வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் தான் உங்கள் குடும்பத்தில் கடைசி முதலமைச்சர். இனி லண்டனுக்கு சென்று ஸ்டாலின் குடும்பம் செட்டில் ஆக வேண்டியதுதான்.

* கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பின்னர் தி.மு.க. தான் எங்கள் பரம எதிரியாகிவிட்டது.

* கரூரை ஒரு ரவுடி கும்பல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. முதலில் அதை மாற்ற வேண்டும்.

* கரூர் சம்பவத்தின் அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

* விரைவில் திமுக- அதிமுக கூட்டணியை மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்க உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் அல்லது மக்களவை தேர்தலின் போது திமுக- அதிமுக கூட்டணி அறிவிக்கப்படும்.

* த.வெ.க. வேட்பாளர்களில் ஒருவரை கூட தி.மு.க.வால் விலைக்கு வாங்க முடியவில்லை. த.வெ.க.வை நம்பியவர்கள் யாரும் கெட்டது இல்லை.

* தேர்தலை பார்த்து த.வெ.க.விற்கு ஒரு போதும் பயமில்லை என்றார்.