தமிழக செய்திகள்

சட்டமன்றத்தில் கட்சி நிதி என்று பேசியவுடன் திமுகவினர் எழுந்தது ஏன்?- ஆதவ் அர்ஜூனா கேள்வி

கொளத்தூர் என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்லக்கூடாதா?. கொளத்தூர் என்பது தமிழ்நாட்டில் இல்லாத ஊரா? நாங்கள் யாரையும் கிண்டல் செய்யவில்லை.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-

* 11 மாத ஆட்சியில் 30 ஆண்டுகால திட்டத்தை நிறைவேற்றியவர் வி.பி.சிங்

* கடந்த 5 ஆண்டுகளில் சமூகநீதிக்காக திமுக அரசு எதையும் செய்யவில்லை.

* வாய் வழியில் சமூக நீதி பேசிய திமுக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. சமூக நீதி கணக்கெடுப்புக்கான அறிவிப்பை தவெக அரசு வெளியிட்டுள்ளது.

* சட்டமன்றத்தில் மாண்புடன் மரபுடன் பேசுகிறோம்.

* தவெக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது. அதனால்தான் நேரலை செய்கிறோம்.

* மக்களின் கண்காணிப்பு வளையத்திற்கு சட்டமன்றம் வந்துள்ளது.

* திட்டங்கள், கருத்துகள், கொள்கைகள் மட்டுமே சட்டமன்றத்தில் த.வெ.க. உறுப்பினர்கள் பேசினோம்.

* முதலமைச்சர் பேசவில்லை, அமைதியாக இருக்கிறார் என தவறான நெரேட்டிவை எதிர்க்கட்சிகள் செய்கின்றன.

* எதிர்க்கட்சிகள் எங்கள் கொள்கைகளை விமர்சிக்கும் போது மட்டுமே பதில் கொடுக்கிறோம்.

* ஆளுங்கட்சியை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டியது எதிர்க்கட்சியின் வேலை.

* சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியையும் மீறி திமுகவினர் கேலி, கிண்டல் செய்தனர்.

* கொளத்தூர் என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்லக்கூடாதா?

* கொளத்தூர் என்பது தமிழ்நாட்டில் இல்லாத ஊரா? நாங்கள் யாரையும் கிண்டல் செய்யவில்லை.

* முதலமைச்சர் குறித்து எதிர்க்கட்சிகள் நையாண்டியாக பேசியது பற்றியும் அனைவரும் பேச வேண்டும்.

* சட்டமன்றத்தில் கட்சி நிதி என்று பேசியவுடன் திமுகவினர் எழுந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.