தமிழக செய்திகள்

மெட்ரோ ரெயில் பணிக்கான இரும்பு கம்பிகள் திருட்டு: இருவர் கைது

கைது செய்யப்பட்ட இருவரும் மாதவரம் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டுள்ளனர்.

மாதவரம் அருகே ரெட்டேரி பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரெட்டேரி பணிமனை அருகில் இருந்து மெட்ரோ ரெயில் தூண் மற்றும் பியர் பகுதியில் கட்டிட பணிக்கான இரும்புக் கம்பிகள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன.

அதில் மொத்தம் 30 இரும்புக் கம்பிகள், சுமார் 135 கிலோ எடையுடைய பொருட்கள் இன்று காலை காணாமல் போயுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விரைந்து செயல்பட்டு இந்த சம்பவத்தில் தொடர்புடை ய புளியந்தோப்பு, சத்தியவாணி முத்து நகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (22), கௌதம் (25) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து போலீசார் 10 இரும்புக் கம்பிகள் மற்றும் சுமார் 75 கிலோ எடையுடைய பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மாதவரம் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருடு போன ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த மாதவரம் போலீசார் பாராட்டுகள் குவிந்து வருகிறது.