தமிழக செய்திகள்

சென்னையில் பெய்த மழையில் சரிந்து விழுந்த 104 மரங்கள்

இரவு நேரத்தில் பெய்த மழையில் சாலையோர இருந்த மரங்கள் மட்டுமன்றி வீடுகளில் இருந்த மரங்களும் விழுந்தன.

மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 56 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்று வரும் நிலையில் பல்வேறு பகுதியில் மரங்கள் சரிந்து விழுந்தன. கிளைகள் முறிந்து விழுந்தன.

அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் தயார்படுத்தப்பட்டு இருந்தனர். கடந்த 15-ந் தேதி முதல் இன்று வரை 104 மரங்கள் விழுந்தன. இரவு நேரத்தில் பெய்த மழையில் சாலையோர இருந்த மரங்கள் மட்டுமன்றி வீடுகளில் இருந்த மரங்களும் விழுந்தன.

இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இரவோடு இரவாக நவீன மரம் வெட்டு கருவிகளுடன் வெட்டி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அகற்றப்பட்டன.

இதே போல மழையால் ஏற்படுகின்ற நோய் பாதிப்புகளை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நேற்று வரை 800 முகாம்கள் நடந்துள்ளன. இதன் மூலம் 27,150 பேர் பயனடைந்துள்ளனர்.

காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று 108 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்தன. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பார்வையிட்டார்.

மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 56 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT