பலத்த மழை: சாலையில் குளம்போல் தேங்கிய தண்ணீர்- வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சீபுரம், ஒலிமுகமதுபேட்டை, பெரியார் நகர், செவிலிமேடு, ஓரிக்கை, உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Published on: 
Summary

பலத்த மழையின் காரணமாக மேட்டு தெரு செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளைகேட், நத்தப்பேட்டை, களக்காட்டூர், வைய்யாவூர், வாலாஜாபாத், தாமல், பாலுசெட்டி சத்திரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 7 மணிவரை திடீரென பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.

மழை நீர்

காஞ்சீபுரம், ஒலிமுகமதுபேட்டை, பெரியார் நகர், செவிலிமேடு, ஓரிக்கை, உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

வாகன ஓட்டிகள் சிரமம்

பலத்த மழையின் காரணமாக மேட்டு தெரு செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com