போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் 
செய்திகள்

ஆண்களுக்கு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை- அமைச்சர் ராஜகண்ணப்பன்

மாநகர பஸ்களில் இதுவரை 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

மாலை மலர்

தமிழக மாநகர பஸ்களில் ஆண்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என இருக்கும் நிலையில், ரூ.10 வசூலிக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  குற்றம்சாட்டி இருந்தார்.

அதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:

* அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சொல்வது போல அரசு பஸ்களில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. 

* நண்பரான திருமாவளவன் அவராகவே பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தார். இதை பெரிதுபடுத்த அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது