சென்னை:
சென்னையைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 30-ந் தேதி தமிழக அரசு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், விநாயகர் சிலையை கரைக்க குறைந்தபட்சம் 5 பேராவது அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத உரிமைகளை விட வாழ்வாதார உரிமை மிகவும் முக்கியமானது. தமிழக அரசு பொதுநலன் கருதி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில், ஐகோர்ட்டு தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படியுங்கள்...குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானம்- பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு