குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானம்- பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியபோது அவர்கள் சபையில் இல்லை. இதனை குறிப்பிட்டு அவை முன்னவரான துரைமுருகன் கருத்துத் தெரிவித்தார்.
பாஜக
பாஜக
Published on

தமிழக சட்டசபையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக சபையில் உறுப்பினர்கள் பேசினார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, நாகை மாலி, சிந்தனை செல்வன், ஜி.கே.மணி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் தீர்மானத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலினை பாராட்டி கருத்துக்களை தெரிவித்தனர்.

பா.ஜனதா உறுப்பினரான நயினார் நாகேந்திரன் பேசும்போது, மத்திய அரசு கொண்டுவந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிம்களுக்கும் பாதிப்பு இல்லை. அதுபோன்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டால் தமிழக பா.ஜனதா அதை நிச்சயம் எதிர்க்கும்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா வெளிநடப்பு செய்கிறது என்று கூறினார்.

இதையடுத்து பா.ஜனதா உறுப்பினர்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியபோது அவர்கள் சபையில் இல்லை. இதனை குறிப்பிட்டு அவை முன்னவரான துரைமுருகன் கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், எதற்கு அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தார்கள் என்பது இப்போது புரிந்துவிட்டது என்று கூறினார். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதே கருத்தைத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com